Saturday, June 26, 2010

உமர்தம்பிக்கு விருது வழங்கப்பட்டது

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.
                                                                                                                      
சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி தம்பி அவர்களின் மகனும், சகோதரரும் துணை முதல்வர் மான்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்கள், உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்கள், உமர்தம்பிக்கு அங்கீகாரம் தர தம்மிடம் நிறைய கோரிக்கைகள் வந்தாகவும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

மேலும் விபரங்கள் புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.

11 comments:

  1. அவருடைய உழைப்பு வீண்போகவில்லை!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. நியாயமாக அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம்! எனது அன்பான வாழ்த்துக்கள். மிக்க சந்தோஷமாக உணர்கின்றேன்!

    ReplyDelete
  3. சகோதரர்கள் அத்திவெட்டி ஜோதிபாரதி,அபி அப்பா இருவரின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.

    நம் அனைவருக்கும் மிக்க சந்தோசமான செய்தியாக தான் இதை நானும் உணருகிறேன்.

    ReplyDelete
  4. மகிழ்ச்சியான விடயம்.... அவரின் உழைப்பு கிடைத்த வெற்றி.... அவர் இல்லாதது மிகுந்த வருத்தமே

    ReplyDelete
  5. நிகழ்வில் நானும் கலந்துக் கொண்டேன்.. மெயில் ஐடி குடுங்க.. போட்டோஸ் அனுப்பி வைக்கிறேன்..

    ReplyDelete
  6. சகோ. SanjaiGandhi™ தங்களின் வருகைக்கு நன்றி,

    என் ஈமெயில் முகவரி tjdn77@gmail.com

    ReplyDelete
  7. நண்பர் கோவி கண்ணன் உங்கள் முகவரி கொடுத்தார்.. படங்கள் அனுப்பிவிட்டேன்.. அன்புக்கு நன்றி சகோதரரே..

    ReplyDelete
  8. சகோ. SanjaiGandhi™ புகைப்படங்களுக்கு நன்றி.

    விரைவில் பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  9. கடின உழைப்பிற்கும்,விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. உமர்தம்பி அவர்களால்...அதிரைக்கு மட்டுமல்ல...இணைய தமிழுக்கும் உலகேங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் பெருமை

    ReplyDelete
  11. வாங்க சகோதரர்கள் யாசிர், அபுல் பசர்.

    உங்கள் இருவரின் வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete