தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள். புகைப்படங்களை பார்த்ததும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் நாட்டில் அதிரையில் பிறந்த உமர்தம்பியை 'துபாய் உமர்தம்பி' என்று பெயரிட்டிருப்பது முதலில் சிறிய வருத்தமாகத் தான் இருந்தது, துபாயில் இருக்கும் காலத்தில் தான் உமர்தம்பி தமிழ் இணைய மக்களிடம் பிரபல்யமானார், உமர்தம்பி மரணித்த போது அவர் துபாயில் இருப்பதாகத் தான் அனேக தமிழ் இணையவாசிகள் எண்ணியிருந்தார்கள், தமிழ் இணைய ஆர்வளர்களிடம் துபாய் உமர்தம்பி என்று அறியப்பட்டதால் 'துபாய் உமர்தம்பி அரங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. உமர்தம்பி என்ற பெயர் தமிழ் இணையம் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஞாபப்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
மாநாடே ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது?
ReplyDeletehttp://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/ulaka_mooda_nambikai/
ராஜவம்சம் "கேலிகூத்து" என்று எதைச் சொல்கிறார்.... !
ReplyDeleteஎது..... "உமர் தம்பி" அவர்களுக்கு அரங்கம் அமைத்து சிறப்பு செய்ததையா..? அல்லது எதை சொல்கிறார்...?
"முட்டை இடும் கோழிக்குத்தான் அதன் வலியும்... வேதனையும்... தெரியும்....!
வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவனுக்கு தெரியாது" என எங்க ஊர் பேச்சு வழக்கம்...
அதைப்போல வாய் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ... என்று பேசுவது தவறு
செம்மொழி மாநாடு பற்றிய விமர்சன செய்தியை ஒரு இணையத் தளத்தில் வந்ததை பற்றித் தான் சொல்கிறார் சகோ. ராஜவம்சம் என்று நம்புகிறேன், உமர்தம்பி விசையத்தில் அல்ல. உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஆதரவு பின்னோட்டமிட்டவர்களில் சகோ. ராஜவம்சமும் ஒருவர் என்பது எனக்கு தெரியும்.
ReplyDelete'உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம்' என்ற பதிவிற்கு சகோ. ராஜவம்சம் பின்னோட்டமிட்டதை பாருங்கள்
ராஜவம்சம், Sunday, June 13, 2010 10:36:00 PM
உண்மைக்கு கிடைத்த வெற்றி
வாழ்த்துக்கள்
சரியாக புரிந்துக்கொண்டமைக்கும் எனது சார்பாக பதில் சொன்னமைக்கும் நன்றி ஜனாப் தாஜூதீன்
ReplyDelete