தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள். புகைப்படங்களை பார்த்ததும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் நாட்டில் அதிரையில் பிறந்த உமர்தம்பியை 'துபாய் உமர்தம்பி' என்று பெயரிட்டிருப்பது முதலில் சிறிய வருத்தமாகத் தான் இருந்தது, துபாயில் இருக்கும் காலத்தில் தான் உமர்தம்பி தமிழ் இணைய மக்களிடம் பிரபல்யமானார், உமர்தம்பி மரணித்த போது அவர் துபாயில் இருப்பதாகத் தான் அனேக தமிழ் இணையவாசிகள் எண்ணியிருந்தார்கள், தமிழ் இணைய ஆர்வளர்களிடம் துபாய் உமர்தம்பி என்று அறியப்பட்டதால் 'துபாய் உமர்தம்பி அரங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. உமர்தம்பி என்ற பெயர் தமிழ் இணையம் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஞாபப்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.