தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது
இந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
உமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி.
உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில்
செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும்
மிக்க நன்றி.
இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத
உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன்.
உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக
அரசுக்கும், தமிழ முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர்கள் அவர்களுக்கும் மிக்க நன்றி.
இம்முயற்சியில் தனிப்பட்ட கவணம் செலுத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி, அரசின் கவணத்துக்கு எடுத்திச் சென்ற தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றி.
இறுதியாக இம்முயற்சியில் முழு கவணம் செலுத்தி தமிழக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரை கவிஞர் சகோதரி 'அன்புடன் மலிக்க' அவர்களுக்கும், அவரின் முயற்சிக்கு பெருதவி செய்த அன்பு சகோதரர் திரு. காஞ்சி முரளி அவர்களுக்கும், திருவாரூர் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்களுக்கும் எங்களின் அன்பான கோடான கோடி நன்றிகள்.
இம்முயற்சியில் தனிப்பட்ட கவணம் செலுத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி, அரசின் கவணத்துக்கு எடுத்திச் சென்ற தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றி.
இறுதியாக இம்முயற்சியில் முழு கவணம் செலுத்தி தமிழக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரை கவிஞர் சகோதரி 'அன்புடன் மலிக்க' அவர்களுக்கும், அவரின் முயற்சிக்கு பெருதவி செய்த அன்பு சகோதரர் திரு. காஞ்சி முரளி அவர்களுக்கும், திருவாரூர் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்களுக்கும் எங்களின் அன்பான கோடான கோடி நன்றிகள்.
வரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன்.
தாஜூதீன்
உண்மைக்கு கிடைத்த வெற்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி ராஜவம்ச சகோதரரே.
ReplyDeleteநிச்சயமாக உண்மைக்கு கிடைத்த வெற்றி.
தமிழ் வலைப்பூக்களால் இணையத்தில் தமிழ் அதிவிரைவில் வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்களில் உமரும் ஒருவர் என்ற உண்மையை இந்த அங்கீகாரம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இது உண்மை இணையத் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால் மிகையில்லை.
மிக மகிழ்வான செய்தி.. பகிர்விற்கு நன்றி..
ReplyDelete//
தமிழ் வலைப்பூக்களால் இணையத்தில் தமிழ் அதிவிரைவில் வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்களில் உமரும் ஒருவர் என்ற உண்மையை இந்த அங்கீகாரம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இது உண்மை இணையத் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால் மிகையில்லை.//
வலைப்பதிவர் தினத்தில் தமிழ் வலைப்பதிவர்களுக்கு கிடைத்த சிறந்ததொரு பூங்கொத்து..
சென்ஷி அவர்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி
ரொம்ப சந்தோஷம்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்.,
ReplyDeleteநேற்று காலை கணினியில் இச்செய்தியை கண்டதும் பரவசமடைந்தேன் எல்லாப் புகழும் இறைவனுக்கே! நம்மூரில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக மாநாடு நடைப்பொற்றதில் கணினி தமிழ் கனிமை மர்ஹூம் உமர் தம்பி அவர்களுக்கோ அல்லது அவரின் தமிழ் கணினியின் பங்களிப்பிற்கோ எந்த வித அங்கீகாரம் அளிக்கவில்லை என்று என் மனக் கிடக்கை வெளியிட்டிறிந்தேன்.
அதற்கு பல நம்மவர்கள் வரவேர்ப்பு கருத்திட்டுறிந்தனர்., அந்த உஷ்ன காற்றின் பிரதிபளிப்போ என்னவோ சகோதர் அதிரைக்காரன் அவர்கள், அவர்களின் வலைப் பதிவில் ஆதாரத்துடன் அதை மிக அழகாக கோர்த்து வலையேற்றம் செய்தார்கள். அது அல்லாஹ்வின் உதவியால் பல நல் உள்ளங்கள் தங்களால் முடிந்த அளவு இதை வலை உலகெங்கும் பரவச் செய்தார்கள் இதில் அதிரை எக்ஸ்ப்ரஸின் பங்கும் மிக அளப்பெறியது
மேலும் அதன் தொடர்ச்சியாக தாமுமுக வும் அதன் தலைவர் பேராசிரியர் சகோ.ஜவாஹிருல்லாவும் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினார்கள்
அந்தக் கோரிக்கையைப் பல்வேறு வலைப்பதிவுகள் வாயிலாக பதிவு செய்த அனைத்து சகோதரர்கலுக்கும்., மற்றும் இதற்காக தம்மால் முடிந்த முயற்சியை மேற்கொண்ட அனைத்து நல் உள்ளங்ககளுக்கும் புத்துணர்ச்சியை தந்துள்ளது ! வாழ்த்துக்கள்! இதில் அனைத்து சமூகத்தாரும் ஒன்றிணைந்து செயலாற்றியதும் நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம் என்பதினை சுட்டிகாட்ட கடமை பட்டுள்ளேன்
இது நம் கூட்டு முயற்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள் என்ற இறை கட்டளைக்கு இது ஓர் நற்சான்று
தாஜுதீன்., உமர் தம்பி மாமா அவர்களுக்கு உலக அங்கிகாரம் மற்றும் தமிழக அரசின் அவர்களுக்கு தந்த அனுசரணையும் கிடைத்ததற்கு உன் விடா முயற்ச்சியும்., ஆர்வமும்தான் ஒரு முக்கிய காரணம் இதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன். மேலும் முயற்சியை மேற்கொள்வோம்
ReplyDeleteஇது நம் கூட்டு முயற்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள் என்ற இறை கட்டளைக்கு இது ஓர் நற்சான்று
அதிரைகும் அதிரை வாழ் மக்களுக்கும் மகிழ்சிகரமான செய்தி உமர் தம்பி அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
ReplyDelete//இது நம் கூட்டு முயற்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள் என்ற இறை கட்டளைக்கு இது ஓர் நற்சான்று//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் சகோ. ஹாலித்
இந்த அங்கீகாரம், உமர்தம்பி மாமா அவர்களின் தமிழ் தொண்டுக்கு கிடைத்த வெற்றி, இது போன்ற அங்கீகாரங்கள் இன்னும் நம்மை போன்றவர்களை நம் தாய்மொழி தமிழுக்காக இன்னும் பல சேவைகளை செய்ய ஒரு தூண்டுகோளாக இருக்கும்.
உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
என்னதான் என் மனதில் வருத்தம் இருந்தாலும், இம்முயற்சியை முதலில் ஆரம்பித்து வைத்த சகோதரருக்குத் தான் முதலில் நாம் பெருந்தன்மையுடன் பாராட்டியாக வேண்டும்.
மீண்டும் ஒரு முறை, இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
சரியாக சொன்னீர்கள் சகோ. சாஹூல், இச்செய்தியை கேட்டவுடன் முதலில் மிக்க மகிழ்ச்சியடைவது நம் அதிரை மக்களாகத்தான் இருக்க முடியும்.
ReplyDeleteநேற்று அதிரை மக்கள் சிலரிடம் நேரடியாக என்னால் காணமுடிந்தது, குறிப்பாக நம்மூர் பெண்களிடம்.
நேற்று அதிரை மக்கள் சிலரிடம் நேரடியாக என்னால் காணமுடிந்தது, குறிப்பாக நம்மூர் பெண்களிடம்.
ReplyDelete+++++++++++++++++++++++++++++++++++
இது போன்ற சந்தோஷமான நிகழ்வுகளை நேரில் காண்பது கண் கொள்ள காட்சி மனது ரெக்கை கட்டி பறப்பது போல் இருக்கும்
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு:
ReplyDeleteசகோதரி மலிக்கா கூறும் சலாம்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல்.
சகோதரர் காஞ்சி முரளியின் மூலம்
தளபதி அவர்களுக்கு
”தந்தை” உமர்தம்பியின் விசயமாக மெயில் அனுப்பினேன்.
பரிசீலினைக்குபின் பதில் அனுப்புவதாக கூறியிருந்தார்கள்
தற்போது தகவல் வந்தது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்" ஒரு நாள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது.. 24 ஆம் தேதி... அம்மாநாட்டு அரங்கில் உமர் தம்பியின் பணிக்கு சிறப்பு சேர்பிக்கும் வகையில் இணைய மாநாட்டு அரங்கிற்கு "உமர் தம்பி அரங்கம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர்.. என்று சந்தோஷம்தானே..
ஏதோ என்னால் ஆனா சிறு முயற்ச்சி சகோதரரே!
இறைவன் நல்லவர்களுக்கு நிச்சயம் துணையிருப்பான்.
என்றும்
அன்புடன் மலிக்கா
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு:
ReplyDeleteசகோதரி மலிக்கா கூறும் சலாம்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல்.
சகோதரர் காஞ்சி முரளியின் மூலம்
தளபதி அவர்களுக்கு
”தந்தை” உமர்தம்பியின் விசயமாக மெயில் அனுப்பினேன்.
பரிசீலினைக்குபின் பதில் அனுப்புவதாக கூறியிருந்தார்கள்
தற்போது தகவல் வந்தது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்" ஒரு நாள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது.. 24 ஆம் தேதி... அம்மாநாட்டு அரங்கில் உமர் தம்பியின் பணிக்கு சிறப்பு சேர்பிக்கும் வகையில் இணைய மாநாட்டு அரங்கிற்கு "உமர் தம்பி அரங்கம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர்.. என்று சந்தோஷம்தானே..
ஏதோ என்னால் ஆனா சிறு முயற்ச்சி சகோதரரே!
இறைவன் நல்லவர்களுக்கு நிச்சயம் துணையிருப்பான்.
என்றும்
அன்புடன் மலிக்கா
திரு. தாஜூதீன் அவர்களுக்கு...
ReplyDeleteவணக்கம்...
இன்றைய உலகத்தில்...
உண்மைகள் நிஜமுகத்துடன் வரும்... அம்முகங்கள் பூச்சுக்கள் (makeup) ஏதுமில்லாமல் இயல்பாய்... கருப்பாகத்தான் இருக்கும்...
பொய்கள்... போலி முகத்துடன்... முகத்தில் சாயங்கள் இட்டு... அழகை... வசீகரமாய்... வெள்ளை நிறத்துடன் பளிச்சென்றிருக்கும்...
இது யதார்த்தமானது...
அதைப்போலத்தான்.. உமர் தம்பிக்கு சிறப்பு கிடைத்தற்கு காரணம் யார் என்பதை அறியாமலே... பாரட்டிகொண்டிருக்ரீர்கள். ..
தங்கள் இந்த பதிவில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் நான் ஏற்றுகொள்கிறேன்... ஆனால்... தங்கள் பதிவில் சிலரைப் பற்றி குறிப்பிட்டு இவர்களும் காரணகர்த்தாக்கள் எனக் கூறியிருப்பது..... இதற்காக உண்மையில் பாடுபட்ட... அதாவது யாரிடம் கோரிக்கை அளித்தால் அது கவனத்தில் கொள்ளப்படும்... ஏற்கப்படும்... என்று உரிய முறையை கையாண்டு... உரிய வழியில் கொண்டுபோய் சேர்பிக்கப்பட்டு.. அக்கோரிக்கை கவனிக்கப்படுகிறதா... நிறைவேற்றப்படுகிறதா... என்று கவனித்து... அக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டதும்.. உண்மையாய் பாடுபட்ட... உரிய வழியில் கொண்டுசென்று நிறைவேற்றிக்காட்டியவர்..... தங்கள் பதிவில் குறிப்பிட்டவர்கள் சூரியனைப்போல இருக்கிறார்... அவற்றை மறைத்துக்கொண்டு நிற்கும் மேகங்களை... அந்த மேகங்கள்தான் கோரிக்கை நிறைவேற்றியதைப்போல பாராட்டியிருக்கிறீர்கள்..
இது வேதனையான விஷயம்... உண்மையில் உழைத்தது யார் என்பதை தாங்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் இக்கடிதம்... ஓர் எடுத்துக்காட்டு... 'விகடன்' உமர் தம்பிக்காக இடுகை இட்டது மே 8இல்... ஆனால் அதற்க்கு மூன்று நாட்களுக்கு முன்பே தமிழக துணை முதல்வர் பார்வைக்கு.... நேரடி பார்வைக்கு... இக்கோரிக்கையை Wed, May 5, 2010 at 11:55 AM மெயில் மூலம் கொண்டு சென்றவரை (கவிஞர் மலிக்காதான் (அதிரையில் பிறந்த கவிஞர் மலிக்கா) மறைத்துவிட்டு... மறந்துவிட்டு... நன்றி சொல்வது ஏன்? கோரிக்கை கொடுத்தபின்... அக்கோரிக்கை தொடர்ந்து follow செய்து மான்புமிகு முதல்வர் வரை கொண்டுசென்றது பத்திரிக்கையோ... பதிவுலகமோ இல்லை... அதை மறந்து விடாதீர்கள்...
"நீரோடை" கவிஞர் மலிக்காதான் இதற்கான முழுமுயற்சியை எடுத்து... அதனை follow செய்தவர்... சாட்சியாக அவர் துணை முதல்வருக்கு அனுப்பிய கடிதமும்... feedbackம் சாட்சி....
இறுதியாய்... "வாய்மை தூங்குவதுபோல் தோன்றும்... அதைப்போல இறுதியில் பொய்மை என்றும் ஜெயிக்காது..."
நன்றி....
காஞ்சி முரளி...
அன்புள்ள சகோதரி மல்லிக்கா,
ReplyDeleteஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக,
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
தங்களின் முயற்சி எனக்கு மிக நன்றாக தெரியும், நீங்களும் எனக்கு அறிவித்திருந்தீர்கள்.ஐயா காஞ்சி முரளியுடன் சேர்ந்து உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி.
உங்களின் முயற்சியும், உங்களைப்போன்ற மற்ற சகோதர சகோதரிகளின் முயற்சியும் தான் இந்த அங்கீகாரங்களுக்கு காரணம் என்பதை நான் நிச்சயம் அறிவேன். எங்களுடை துஆக்கள் என்றைக்கும் நிச்சயம் அனைவருக்கும் இருக்கும்.
வாழ்த்துக்கள், நன்றி.
ஐயா காஞ்சி முரளி, வணக்கம்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி.
முதலில் உங்களுக்கு ஒரு விசையத்தை தெரியப்படுத்த விரும்புகிறேன். இங்கு நான் எந்த வித பொய்யான தகவலையும் பதியவில்லை, இனி பதியப்போவதுமில்லை. இவ்வளவு விபரம் நீங்கள் எழுதித்தான் எனக்கு அறிய முடிந்தது. தங்களுக்கு மிக்க நன்றி.
உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது சம்பந்தமான விசையத்தில் எத்தனையோ சகோதர சகோதரிகளின் பங்கு உள்ளது என்பது எனக்கு தெரியும், என்னுடைய பதிவுகளில் எந்த தனி நபரையும் நான் குறிப்பிட்டு புகழ்ந்து நன்றி சொல்லவில்லை. பல திசைகளிலும் இணையத் தமிழர்களின் குரல் சென்றுள்ளது, பொதுவாக இதற்கு ஆதரவு குரல் தந்த அனைவருக்கும் நன்றி சொல்லியிருந்தேன்.
சகோதரி மல்லிகா அவர்களின் முயற்சி எனக்கு தெரியும், அவர்கள் என்னிடமும் தெரிவித்திருந்தார்கள். விரிவாக நீங்கள் எனக்கு எடுத்துக்காட்டியதற்கு மிக்க நன்றி.
உமர் தம்பி அவர்களின் தமிழ் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்க செய்ய உலகத் தமிழ் நெஞ்சங்கள் அனைவரின் பெயர்களை தொகுத்துவருகிறேன், தமிழ் இணைய மாநாடு முடிவடைந்த உடன் அனைத்து நல்ல உள்ளங்களில் பெயர்களை நிச்சயம் வெளியிடுவேன். நான் யாரையும் மறக்கவில்லை.
உமர்தம்பி அவர்களின் குடும்பத்தில் ஒருவனான நான், நிச்சயம் அனைத்து சகோதர, சகோதரிகளின் முயற்சிகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்.
வாய்மையே வெல்லும்.
ஐயா காஞ்சி முரளி,
ReplyDeleteதங்களின் இணைய மடல் முகவரியை எனக்கு அனுப்புங்கள், உங்களுக்கு இது சம்பந்தமாக விரிவாக மடல் எழுதுகிறேன்.
my email tjdn77@gmail.com
ஐயா காஞ்சி முரளி,
ReplyDeleteதங்களின் இணைய மடல் முகவரியை எனக்கு அனுப்புங்கள், உங்களுக்கு இது சம்பந்தமாக விரிவாக மடல் எழுதுகிறேன்.
my email tjdn77@gmail.com
ஐயா காஞ்சி முரளி..தங்களின் விளக்கவுரை...பல விளக்கங்களையும் தந்தது..தேனீ உமர்தம்பி அவர்கள் எந்த வித பலனும் எதிர்பாராமல் இணைய தமிழுக்கு செய்த சேவை யை போன்று நீங்களும் ..சகோதரி கவிஞர் மலிக்காவும் பலனை எதிர்பார்காமல்..உமர்தம்பி அவர்களை அங்கீகரிக்க செய்த முற்ச்சிக்கு அதிரைவாசிகளாகிய நாங்கள் என்றேன்றும் உங்களுக்கு கடமை பட்டு இருக்கிறோம்..தாங்கள் நான் கேள்விப்படாத ஒரு சந்தோசமான செய்தியையும் சொல்லி இருக்கிரீர்கள்..எங்கள் ஊரில் இருந்து மலிக்கா என்றஒரு பெண் கவிஞரா ? கேட்கும்போதே....நெஞ்சம் மகிழ்ச்சியால் பொங்குகிறது.. HATS OFF TO YOU MALIKKA
ReplyDeleteமிகப்பெரிய விசயம், இணையத்தில் புதிய விசயத்தை புகுத்திய மறைந்த சகோ யுனிக்கோடு உமர் அவர்களின் உழைப்பு வெகுவாக பாராட்டப்படக்கூடியது. இதன் மூலம் தாய்மொழியை சுலபமாக கையாள வழிவகை செய்த அந்த சகோ. நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். தமிழ் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உமர்தம்பி அரங்கை கண்டவுடன் எல்லையில்லா மகிழ்ழ்சி. இதர்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் முக்கியமாக கவிஞர் மல்லிகாவுக்கும் என் நன்றிகள்
ReplyDelete