Wednesday, April 14, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?


தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:


www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17

http://www.pudhucherry.com/pages/umar.html

http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803

http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html



நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.pudhucherry.com/text/THENEE.eot


http://www.pudhucherry.com/text/VAIGAIU0.eot

உமர் ஒருங்குறி எழுதி

(AWC Phonetic Tamil Unicode Writer)

http://www.pudhucherry.com/pages/UmarUni.html

உமர் ஓடை எழுதி


http://www.pudhucherry.com/pages/umarrss.html

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.

47 comments:

  1. கண்டிப்பாக கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.....

    ReplyDelete
  2. தாஜுதீன்

    நிச்சயம் முயற்சி செய்வோம்
    அதில் பங்குகொள்ள நானும் கடமைப்பட்டவன்

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ்

    அவருக்கு அங்கிகாரம் அவசியம் கிடைக்கனும்.

    ReplyDelete
  4. இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக கிடைக்கனும். எம்.கே.கவுஸ்(pno)

    ReplyDelete
  5. இன்ஷா அல்லா கண்டிப்பாக அங்கிகாரம் கிடைக்கனும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ஜலீலா

    ReplyDelete
  6. சகோதரர்கள் அஹமது இர்ஷாத், மு.அ. ஹாலித், நட்புடன் ஜமால், Ghouse, ச்கோதரி Jaleela ஆகியோரின் வருகைக்கு நன்றி, உமர்தம்பி மாமா அவர்களுக்கு தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற இந்த முயற்சிக்கு ஆதரவு அளித்து என் வலைப்பூவிலும் மற்ற சகோதரர்களின் வலைப்பூவிலும் பின்னோட்டமிட்டு வரும் அனைத்து சகோதரர்களுக்கு மிக்க நன்றி, தயவு செய்து இந்த செய்தியை தங்களின் வலைப்பூக்களில் மீள் பதிவு செய்து இந்த முயற்சி வெற்றியடைய உதவுவது தான் நீங்கள் உமர்தம்பி அவர்களுக்கு செய்யும் நன்றி கடன்.

    இந்த கட்டுரை எழுதி, இந்த முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்த சகோதரர் அதிரைக்காரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரியப்படுத்துகிறேன்.

    ReplyDelete
  7. நிச்சயம் அங்கீகாரம் கிட்டும். முன் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அங்கிகாரம் கிடைக்கும் .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. May Allah shower all his blessings to Mr. Tajudeen and the people who are involved in this fantastic job. جزاكم الله خيرا في الدارين

    ReplyDelete
  10. முயற்சியைத் தொடருங்கள். இன்ஷா அல்லாஹ் தக்க அங்கீகாரம் கிடைக்கும்.

    ReplyDelete
  11. கண்டிப்பாக உரிய அங்கீகாரம் கிடைக்குமென்று நம்புவோம்.

    ReplyDelete
  12. நிச்சியம் கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.

    நானும் இப்பதிவை போட்டுள்ளேன்.

    http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_21.html

    ReplyDelete
  13. koothanalluran, தமிழ் குடும்பம், muhammad, ஹுஸைனம்மா, அக்பர், அன்புடன் மலிக்கா.

    அனைவரின் வருக்கைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    அன்புடன் மலிக்கா, தங்களின் வலைப்பூவிலும் இந்த வெளியிட்டதற்கு மிக்க நன்றி. இந்த முயற்சிகளுக்கு பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.

    ReplyDelete
  14. கண்டிப்பா அங்கீகாரம் கிடைக்கும்

    ReplyDelete
  15. சகோதரர் மீன்துள்ளியான், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. தேனீ உமருக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுகோள் வலைப்பூ தொடுப்பை தன் முதல் பக்கத்தில் வெளிவர செய்த தமிழ்மணத்தை மனதார பாராட்டுகிறேண்.

    நன்றி மறவாத தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி.

    யுனிகோட் உமர்தம்பிக்கு என்று தமிழ்மணத்தில் ஒரு தனி இடம் உண்டு எனபதை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    இதன் மூலம் தமிழ்மணம் கணினி தமிழ் ஆர்வளர்களை மீண்டும் ஒரு முறை உற்சாகப்படுத்தியுள்ளது.

    மீண்டும் நன்றி நன்றி நன்றி...

    ReplyDelete
  17. அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்

    ReplyDelete
  18. தமிழ்மணம் தளத்தில் உமர்தம்பி புகைப்படத்துடன் இந்த வலைப்பதிவை முதல் பக்கத்தில் வருமாறு செய்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி.

    கொலோனில் நடைபெற்ற உத்தமம் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற யான் அங்கு சென்றிருந்தேன். தமிழ்மண நிர்வாகிகளில் ஓருவரான திரு நா. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் வலைவாசல், திரட்டிகள், மற்றும் விக்கிபீடியா அரங்கிற்கு உமர் தம்பி அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள்.

    ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவரது பெயரை அரங்கிற்கு சூட்டியதை கண்டு அளவிலாத மகிழ்ச்சியடைந்தேன்.

    தமிழ் இணைய வளர்ச்சியில் தமிழ்மணத்தின் அர்ப்பணிப்பு (தமிழூற்று என்ற திரட்டி உருவாக்கி, நிர்வகித்த அடிப்படையில் அனுபவபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் உணர்ந்தது) போன்று அன்றைய தமிழ் இணைய வலைப்பக்கங்களில் இருந்த யுனிகோடு பிரச்சினைக்கு தேனீ என்னும் ஓருங்குறி எழுத்துரு உருவாக்கி தந்தார். தமிழ் வலைப்பதிவுகள் ஒருங்குறி பிரச்சினையின்றி சரிவர தெரிய தமிழ் சமூகத்திற்கு உதவியவர். அன்றைய கட்டத்தில் தேனீ இயங்கு எழுத்துரு (thenee.eot) 90 சதவீத வலைப்பதிவுகளில், தமிழ் இணையதளங்களில் பங்காற்றியதாக பிரபல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். (உமர் தம்பி, thenee.eot என்று தேடுபொறிகளில் தேடுக)

    தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

    உமர்தம்பி அவர்களுடன் நெருங்கிப் பழகிய தமிழ் கணிமையாளர்கள், உத்தமம் குழுவினர் இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மாஹிர், சென்னை

    ReplyDelete
  19. சகோதரி.பாத்திமா ஜொஹ்ரா, சகோதரர். மாஹிர்
    வருகைக்கு மிக்க நன்றி.

    நிச்சயம் உத்தமம் குழுவினர் இக்கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் பலமாக உள்ளது.

    ReplyDelete
  20. அன்றைய தமிழ் இணைய வலைப்பக்கங்களில் இருந்த யுனிகோடு பிரச்சினைக்கு தேனீ என்னும் ஓருங்குறி எழுத்துரு உருவாக்கி தந்தார். தமிழ் வலைப்பதிவுகள் ஒருங்குறி பிரச்சினையின்றி சரிவர தெரிய தமிழ் சமூகத்திற்கு உதவியவர். அன்றைய கட்டத்தில் தேனீ இயங்கு எழுத்துரு (thenee.eot) 90 சதவீத வலைப்பதிவுகளில், தமிழ் இணையதளங்களில் பங்காற்றியது. தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.மர்ஹூம்.தமிழ் ஆர்வலர் உமருதம்பி காக்காவின் தமிழுக்கு செய்த கொடை காலத்திற்கும் போற்றதக்கது.தமக்குள் இருந்த தமிழ் பற்றினால் தமக்கு வந்த கொல்லும் நோயான புற்றையும் பொருட்படுத்தாது நாம் தமிழர் சமூகத்திற்கு காலத்தினால் செய்த உதவியை அரசு மறவாமல் அன்னாருக்கு மரியாதை செலுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.Mohamed Thasthageer.

    ReplyDelete
  21. நிச்சியம் கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.

    நானும் இப்பதிவை போட்டுள்ளேன்

    www.adirai-info.blogspot.com

    ReplyDelete
  22. இன்சா அல்லாஹ் கிடைக்கும் .. இப்பதிவை நானும் இடலாம் என்று உள்ளேன்.. உங்கள் அனுமதி அளித்தால்...

    ReplyDelete
  23. சகோதரர்கள் தஸ்தகீர், ஜஹாங்கீர், அதிரை அபூபக்கர் ஆகியோரின் வருகைக்கு மிக்க நன்றி. அபூபக்கர் நீங்கள் தாராளாமாக உங்கள் அனைவரின் வலைப்பூக்களில் பதியலாம். இந்த கட்டுரையை சமர்ப்பித்த அதிரைகாரன் அவர்களின் அனுமதி அனைவருக்கும் உண்டு என்பதை அவர்களின் கட்டுரை பின்னோட்டத்தில் எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  24. என் பால்ய நண்பர் உமர்தம்பிக்கு தமிழ் செம்மொழி மாநாட்டில் நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    அதற்கு அவர் முற்றிலும் அருகதையுடையவர்.

    ஜெர்மனி யூனிகோடு மாநாட்டில் பாராட்டப்பட்டவருக்கு தமிழ்நாட்டிலும் அங்கீகாரம் கிடைக்க அதே குழுமத்தைச் சார்ந்தவர்கள் அரசுக்கு எடுத்துரைப்பது மூலம் இது எளிதாகும்.

    ReplyDelete
  25. சகோதரர். ஜமால் முகம்மது உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உமர்தம்பி அவர்களின் நட்புக்கு மரியாதை தந்தமையை நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது. மற்ற தமிழ் நெஞ்சங்களிடம் சொல்லுங்கள்.

    நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பது உண்மை கணினி தமிழ் ஆர்வளர்களின் ஆவல், நம்பிக்கை.

    தமிழக அரசின் கவனத்திற்கு உத்தமம் குழுமம் எடுத்து செல்லும் என்ற நம்பிக்கை நம் அனைவரிடம் உண்டு.

    ReplyDelete
  26. தமிழெழுதியை ஒருங்கினைத்த
    அதிரை யுனிகோட் உமர்தம்பி அவர்களின்
    அனைத்து தகவல்கலும் சேகரித்து
    அதற்கான ஒரு குழு அமைத்து
    ( அக்குழுவில் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜாமுஹைதீன், தமிழ் பேராசிரியர் அப்துல் காதர்,
    மாஹிர், அதிரை அஹ்மத், அன்வர்)
    இன்னும் சில, பல நல விரும்பிகளைஅனுகி., மேலும்
    உள்லூர் வெளியூர் களில் இருக்கும்
    அமைப்புகளை தொடர்புக்கொண்டு கல்விதுரைக்கு பரிந்துரை
    செய்யலாமா?
    கல்விதுரை முகவரி...

    முதன்மைச் செயலர்,
    உயர் கல்வித் துறை,
    தலைமைச் செயலகம்,
    புனித ஜார்ஜ் கோட்டை,
    சென்னை - 600 009'

    Please more comment and Suggestion

    ReplyDelete
  27. அரசே...யாருக்கேல்லாம் விருது வழங்கும் நீங்கள்..இனிய தமிழை இணையத்தில் எளிமையாக்கிய யுனிகோட் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கொடு..அப்போதுதான் இணையதமிழுக்கும் & தமிழ் நாட்டுக்கும் பெருமை

    ReplyDelete
  28. செம்மொழி மாநாட்டில் தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் - தமிழ் கணிமையாளர்கள் வலியுறுத்தல்

    ReplyDelete
  29. கண்டிப்பாக கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  30. தமிழ்மொழி இன்று இணையத்தில்தான் அதிக அளவில் வளர்ந்து வருகிறது; அதில் முத்தமிழும் சேர்த்தே வளர்கிறது!
    இணையத்தமிழைத்தான் நான்காம் தமிழ் என அழைக்கிறோம்!
    நான்காம் தமிழ் உருவாக்கத்தின் வளர்ச்சிக்கு,தன‌து உடல் நலனையும் பொருட்படுத்தாது தன்னை முழுமையாக அர்பணித்தவர்தான்
    நான்காம் தமிழின் தந்தைதான் தேனீ உமர்தம்பி அவர்கள்!

    சிறு பொருளையும் காசாக்கும் உலகில், தமிழ் மேல் கொண்டபற்றால் தனது கண்டு பிடிப்பை இலவசமாக தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கி மறைந்தும், மறையாமலும் இருகிறார்கள் நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பி அவர்கள்;
    செத்தும் கொடை கொடுத்த சீதாக்காதி அவர்களுக்கு பின் தமிழ் இணைய சீதக்காதி!

    முத்தமிழ் அறிஞர், காவலர்,காதலர் கலைஞர் அவர்கள் ஆட்சியில், அவர்கள் நடத்தும் தமிழ் செம்மொழி மாநாட்டில் நான்காம் தமிழின் தந்தை தேனீ உமர்தம்பி அவர்களை கவுரவிப்பது பொருத்தமான ஒன்று!

    கலைஞர் அவர்களே!

    இதனை நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்வார்கள்?
    நீங்கள் அரசியல்வாதி, முதல்வர் மட்டுமல்ல;முத்தமிழ் தமிழறிஞர்!
    ஆட்சி பீடத்தை விடவும், தமிழ் காதலன்!


    கலைஞர் அவர்களே!

    உங்கள் இளமை காலத்தில் அதிராம்பட்டினத்திற்கு அடிக்கடி வருவீர்களாம்;உங்கள் அதிரை நன்பர்கள் சொல்லக்கேட்டதுண்டு.

    அதிரைவாசிகளின் தமிழ் மேல் உங்களுக்கு ஒரு ஈர்ப்பு!

    "உங்கள் தமிழ் உச்சரிப்பு அழுத்தமானவை;அழுகிய வார்த்தைகளை; கோபத்தில் கூட நல்ல வார்த்தைகள் உபயோகப்படுதுகிறீர்கள்" என்பதெல்லாம் உங்கள் வார்த்தைகள்.

    அன்று எங்கள் தமிழ் உச்சரிப்புகளுக்கு வாழ்த்து சொன்னீர்கள்....

    இன்று அதே அதிரையின் தவப்புதல்வன்,நான்காம் தமிழ் தந்தை தேனீ உமர்தம்பி அவர்களுக்கு நீங்கள் நடத்தும் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி அங்கிகாரம் தருவீர்கள் என நாங்கள் அழுத்தமாக நம்புகிறோம்.

    ReplyDelete
  31. உமரு என்ற உத்தமர்
    உருவாக்கிய தேனீ எழுத்துக்கள்
    கணினி உலகில் தமிழின் தலையெழுத்தை எழுத உதவியது.
    ஆதாயம் தேடும் உலகில் தமிழுக்காய் ஊதியம் பெறாமலே உழைத்த தேனீ அவர்.
    புகழெல்லாம் படைத்தவனுக்கே சொந்தம் என்பதனால் ..
    இதன் புகழ் தமக்கு சொந்தமில்லை யென்பதைச் சொல்லாமல் சொன்னவர்.
    அதிரையின் மேல் பலத்திரை வீழ்ந்திருக்க,
    அத்திரை விலக நல்லவை செய்தவர் நீங்கள்.
    எல்லாப்புகழும் அல்லாஹுக்கே உங்கள் எழுத்தை கொண்டே நாங்கள் செய்திட்ட நல்ல சொல் ஆக்கங்களுக்கு ஆகிரத்தில் உங்களுக்கு சுவனப்பதவித்தர வேண்டுகிறோம்.
    MohamedThasthageer

    ReplyDelete
  32. அன்புச்சகோதரர் அவர்களுக்கு.
    இது சம்மந்தமாக தெரிவிக்கவேண்டி இடத்திற்க்கு என்னால் ஆன ஒரு சிறு முயற்ச்சியை செய்துள்ளேன்.

    அந்த முயச்சிக்கு பலன் [கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்கு]நிச்சயம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..

    ReplyDelete
  33. சகோதரி மலிக்கா அவர்கள், உங்களின் தனிப்பட்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம், தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உண்மையில் உங்களை போன்ற மற்ற தமிழ் ஆர்வளர்களின் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும் என்று நம் அனைவரின் நம்பிக்கை. அரசின் கவணத்திற்கு படிபடியாக செல்கிறது என்பதை வரும் மடல்களில் காணமுடிகிறது.

    நாம் அனைவரும் நிச்சயம் உமருக்கு அங்கீகாரம் கிடைக்க படைத்த இறைவனை வேண்டிக்கொள்வோம்

    ReplyDelete
  34. உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களில் வலைப்பூக்களில் செய்தி வெளியிட்டு வரும் அனைத்து தமிழ் ஆர்வ சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி. மேலும் இந்த கோரிக்கை செய்தியை அதிக வலைப்பூக்களில் வெளியிட அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

    ReplyDelete
  35. தேனீ உமர் : உலக தமிழ் மாநாட்டில் தேனீ உமருக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற தலைப்பில் வரும் பதிவுகளைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமிய பதிவர்களின் பெயர்களின் தான் வருகின்றன. தமிழ் மணமும் உமரை நினைவு கூர்ந்து முகப்பில் அவரது படத்தை வைத்து, இணைப்புக் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது. தேனீ 'உமர்' என்கிற பெயரில் 'உமர்' - க்கு பதிலாக ஒரு இந்து பெயர் இருந்திருந்தால் அவருக்கான அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்திருக்கும் அளவுக்கு எடுத்துச் சென்றிருப்போமோ ? மத அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம்மால் ஒன்றுபட்டு ஒருவரின் சாதனைகளைக் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம் என்றே தெரியவில்லை.

    திரு. கோவி கண்ணன்.

    நன்றி: http://govikannan.blogspot.com/2010/05/052010.html

    ReplyDelete
  36. //தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.//

    செத்த பிறகே சிலை வைக்கும் பழக்கம் நமக்கு. உமர்தம்பிக்கு இனியாவது நன்றி செலுத்தி பெருமைப்படுத்துவோம்.

    ReplyDelete
  37. //செத்த பிறகே சிலை வைக்கும் பழக்கம் நமக்கு. உமர்தம்பிக்கு இனியாவது நன்றி செலுத்தி பெருமைப்படுத்துவோம்//

    ஐயா வணக்கம்,

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, நீங்கள் சொல்வது உண்மைதான், ஒரு படைப்பாளி வழும் போதே கவுரவிக்கபட வேண்டும், இல்லையேன்றால் அவரின் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நம் தமிழ் சமுதாயம். தமிழன் என்று பார்ப்பதைவிட மதத்தாலும், ஜாதியாலும் பிரித்தாளப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழன் என்ற அடையாளம் எல்லா நாட்டைவரையும், எல்லா மதத்தையும் தாண்டி என்று வருகிறதோ அன்று தான் தமிழ் மொழி இவ்வுலகில் உண்மையில் தனித்தன்மையுடன் வளாரும் என்பது தமிழார்வளர்களின் நம்பிக்கை என்றால் அது மிகயில்லை.

    ReplyDelete
  38. இந்த வலைப்பூவில் உமர் பற்றி ஒரு வித்தாசமான பதிவு சென்ற்ய் பாருங்கள் http://sinekithan.blogspot.com/2010/05/blog-post_06.html

    ReplyDelete
  39. adiraix உமர்தம்பி அவர்களை பற்றி ஆனந்த விகடன் இணையத்தில் செய்தி http://youthful.vikatan.com/youth/Nyouth/umarthambi080510.asp

    ReplyDelete
  40. அங்கீகாரம் கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் முயற்சி செய்வோம்.

    ReplyDelete
  41. http://allinalljaleela.blogspot.com/2010/06/blog-post_10.html

    i
    இந்த பதிவை பார்க்கவும்.

    ReplyDelete
  42. சகோதரி ஜலீலா முதலில் உங்களுக்கு மிக்க நன்றி.

    யுனிகோட் உமர்தம்பி அவர்கள் பற்றிய புதிய செய்திகளை இணையத் தமிழர்களுக்கு தந்தது நிச்சயம் பயனுல்லதாக இருக்கும்.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிக்கு முதல் வெற்றி நேற்று உத்தமம் இணையத்தலத்தின் மூலம் அறிய முடிந்தது.

    என் வலைப்பூவிலும் நன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

    விடுமுறையில் இருப்பதால் அதிகம் இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை.

    என்னுடைய புதிய அதிரை வலைப்பூக்கள் திரட்டி ஒன்றை அதிரைமணம் அறிமுக படுத்தியுள்ளேன் சென்று பாருங்கள் உங்கள் கருத்தை பதியுங்கள். நீங்கள் அனுமதி தந்தால் உங்கள் வலைப்பூவையும் அதிரைமணத்தில் இணைத்துவிடுகிறேன்.

    அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றி செய்தி வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

    உங்கள் வலைப்பூ இன்னும் மிகச்சிறப்பாக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. சகோதரி ஜலீலா முதலில் உங்களுக்கு மிக்க நன்றி.

    யுனிகோட் உமர்தம்பி அவர்கள் பற்றிய புதிய செய்திகளை இணையத் தமிழர்களுக்கு தந்தது நிச்சயம் பயனுல்லதாக இருக்கும்.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சிக்கு முதல் வெற்றி நேற்று உத்தமம் இணையத்தலத்தின் மூலம் அறிய முடிந்தது.

    என் வலைப்பூவிலும் நன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளேன்.

    விடுமுறையில் இருப்பதால் அதிகம் இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை.

    என்னுடைய புதிய அதிரை வலைப்பூக்கள் திரட்டி ஒன்றை அதிரைமணம் அறிமுக படுத்தியுள்ளேன் சென்று பாருங்கள் உங்கள் கருத்தை பதியுங்கள். நீங்கள் அனுமதி தந்தால் உங்கள் வலைப்பூவையும் அதிரைமணத்தில் இணைத்துவிடுகிறேன்.

    அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றி செய்தி வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

    உங்கள் வலைப்பூ இன்னும் மிகச்சிறப்பாக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. சிங்கைத் தமிழ்ப்பதிவர்கள் அண்மையில் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தி வெற்றி பெற்றோரை சிங்கைக்கு ஒரு வாரம் வரவைத்து மகிழ்வித்தார்கள். அப்போது //இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன்,தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக // பரிசுகள் வழங்கினார்கள்.

    நான் தேனி உமர் தம்பியின் பெயரால் கொடுக்கப்பட்ட பரிசு பெற்று மிக்க மகிழ்வடைந்தேன்; பெருமை பெற்றேன். அவரின் தமிழ்த் தொண்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நாடும் அவரை மேலும் பெருமைப்படுத்த ஆவல்.

    ReplyDelete
  45. சிங்கைத் தமிழ்ப்பதிவர்கள் அண்மையில் கட்டுரைப் போட்டி பற்றிய செய்தி சகோதரர் கோவி கண்ணன் அவர்களின் வலைப்பூவில் பார்க்க முடிந்தது. உமர்தம்பி பெயரில் விருது வழப்பட்ட செய்தி அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம், அதுவே உமருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்று சொன்னால் மிகையில்லை.

    சகோ. தருமி தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி, இது போல் இன்னும் பல நல்ல செய்திகள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

    தேனீ உமர்தம்பி பெயரால் விருது மற்றும் பரிசுபெற்ற உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

    தன்னலம் விரும்பாதா உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை உலகுக்கு எடுத்துறைத்துக்கொண்டே இருப்போம்.

    ReplyDelete
  46. சிங்கைத் தமிழ்ப்பதிவர்கள் அண்மையில் கட்டுரைப் போட்டி பற்றிய செய்தி சகோதரர் கோவி கண்ணன் அவர்களின் வலைப்பூவில் பார்க்க முடிந்தது. உமர்தம்பி பெயரில் விருது வழப்பட்ட செய்தி அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம், அதுவே உமருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்று சொன்னால் மிகையில்லை.

    சகோ. தருமி தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி, இது போல் இன்னும் பல நல்ல செய்திகள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

    தேனீ உமர்தம்பி பெயரால் விருது மற்றும் பரிசுபெற்ற உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

    தன்னலம் விரும்பாதா உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை உலகுக்கு எடுத்துறைத்துக்கொண்டே இருப்போம்.

    ReplyDelete